விவசாயி
மேல் சட்டை இல்லா
மேதையே மேகத்தின் மழையின்
மத்தியில் வாழும்
மாமேதையே
மறந்து கூட உன் உழைப்பை நிறுத்தினால்
மாண்டு போகும் மனித
பிறவி
காலம் மாறி(ரி) போனாலும்
கடமை மாறாமல்
கம்ப சோற்றில் உன் பசி ஆற்றி
கொண்டு
அகிலம் முழுவதும் அறுசுவை உணவு
அளிக்கும் ஆண்டவா
துவண்டு போன வேளாண்மையை மீண்டும்
துவக்கி பசுமை புரட்சிக்கு வித்திடு வித்தாகவே
[வியர்வையை விற்று உழைப்பை பெறு
விவசாயத்தை விற்று இறப்பை பெறதே ]