நெஞ்சே
வார்த்தைகளைத்
தொலைப்பதா
மௌனம்?
வாய் மூடிக்கொண்டாய்?
இமைகளையும் இழுத்து சாத்திவிட்டு
எங்கே உன் கவனம்
என் மேல் சிதறிவிடுமோ
என்றும் அஞ்சுகிறாய்?
தகுதியில் நாம்
ஒருவரை ஒருவர்
மிஞ்சவில்லை என்பதால்
மெல்லப்புன்னகைக்கிறாய்?
காதலிக்க எல்லாமும் இருந்தும்
ஏன் உன்னால் முடியவில்லை?
காதல் என்றாலே
ஒரு சோக சாபம்
என்பதாலா?
காதலித்தாலே
வாழ்க்கையென்பது
வெந்து தணியும் காடு என்பதாலா?
சொல் நெஞ்சே
சோகத்தையாவது
நான் கேட்டு தொலைக்க,
அடைபட்டிருக்கும்
காதல் மூச்சை சுவாசிக்க...
இல்லையேல்
என் இதயம் அல்லவா வெடித்து விடும்...!