நகைச்சுவை - தமிழுக்கு ழ கரம்

தமிழ் வாத்தியார் ; டேய் மணி உன் வாயில் இன்னும்

தமிழ் மொழிக்கு அழகாம் 'ழ' நுழைய

மறுக்கின்றதே

மணி : ஐயா அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்

தயவிட்டு சொல்லுங்களேன்

தமிழ் வாத்தியார் : மணி அதற்கு நீ நீயே கடைக்கு சென்று

நித்தமும் இரண்டு வாழைப்பழங்கள்

வாழைப்பழம் என்று இரைந்து கேட்டு

வாங்கி வந்து பழம் பழம் என்று கூவி

ஒரு வாரம் சாப்பிட்டால் 'ழ 'கரம்

உன் நாவில் அமர்ந்திடுமே என்றார்


மணி ; நன்றி ஐயா தமிழுக்கு இப்பணி நான்

சேதி தீருவேன் எழுத்தை சரியாய்

உச்சரிப்பேன் என்றான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jul-16, 3:16 pm)
பார்வை : 578

மேலே