ஒரு சொல்லில் உயிர்வாழ

ஒரு சொல்லில்
உயிர் வாழவும்.....
ஒரு
சொல்லில் என்னுயிர்
பிரிக்கவும்
உன்னால்தானே
முடியும்.....
என்னவளே.....!

விழிமூடி
யோசித்தால்
மறுகணமே.....
விழிமூடாமலே
விடிகிறதே
என் ஒவ்வொரு
இரவும்.....!

என்னோடு
பேசாத
உன்னுடைய
ஒவ்வொரு இரவையும்
நிச்சயம்
ரசித்திருக்க
சாத்தியமில்லை.....
சத்தியமாய்
சொல்வேனடி
சகியே......!!

வாலிபம்
மெல்ல மெல்ல
சாகிறது.....உன்னுடைய
வலிகள்
காட்சி ஆகிறது.....
என்னுடைய விழிகளில்
கண்ணீரே
சாட்சியாகிறது.....!!

உன்னைமாதிரி
ஒருவரை ஏன்
நேசிக்கவில்லை
என்றும்.....ஏன்
நேசித்தேன்
என்றும்....என்னை
கலங்கடித்த
கண்மணியே
கண்ணுக்குள்
கலகம்
அடங்கவில்லையே.....!!

உன்னை நினைக்காத
நேரமில்லை....
உன் நினைவின்றி
நகரும்..... நிமிஷங்கள்
இருந்தால்.....நிச்சயம்
உயிரோடு
நான் இல்லையென்பேனே......!!

இதயங்கள்
பேசும்
என்றும்
அன்புடன்....

அழியாத காதல்......
அளவில்லாத காதல்.....
அடியே.....துடியாய்
துடிக்கிறேன்.....தூரம்
நின்றாலும்......
கொல்லும் துயரம்
நீங்காதா என்னை.....விட்டு.....???

எழுதியவர் : thampu (19-Jul-16, 2:12 am)
பார்வை : 94

மேலே