கொலுசு
கொலுசு
___________________________________ருத்ரா
உன்னைத்தான்
கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
கேட்கவில்லையா?
அந்த ஒலியில்
உன் அர்த்தம் இது தான்
கண்ணே!
ஆனால்
அந்த ஒலி
என் இதயத்து ஒலி.
நானும் தான்
அதில் உன்னை
கூப்பிட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
கண்ணே!
அது உனக்கு
கேட்கவில்லையா?
_____________________________________________________