தாய்
அன்பை தந்து நல் அறிவுக்கு வித்திட்டு
நல் வண்ணம் வாழ்க்கையை அமைத்திட
வாழ்வு முழுவதும் துணை புரியும் மனித இறைவி -தாய்
தனக்கு எவ்வித இடையூறுகள் வந்தாலும்
தன் உள்ளத்தில் மறைத்து
பிள்ளையின் இன்பத்தில் தினமும்
அக்கறை கொண்டு தவம் இருக்கும் ஜீவன் - தாய்
பிள்ளையின் மன வலிமைக்கு உரம் போட்டு
தன் நம்பிக்கை யை உருவாக்கி விடும் சக்தி - தாய்