பிரியாத வரம் நீ

கண்ணில் காற்றுப்பட்டு நீர் வழிந்தாலும்,
புயலென காற்றுடன் சண்டை போட வேண்டும்!

நான் எழுதிய கவிதை படித்த நீ,
அதன் பரமவிசிறியாக வேண்டும்!

என் உடல் போன போதும், உயிர் உண்டு என்று,
நீ காற்றில் கலவாமல் இருத்தல் வேண்டும்!

உன் உயிர் பிரியினும் என் இமை கொண்டு,
உன்னை சிறை வைப்பேன்!

என் கொலுசு சத்தம் தான் உனது மொழியாக வேண்டும்!
குழந்தை என்றும் நானே, தாய் என நீயே வேண்டும்!

உறக்கத்தில் கூட மறவேனோ!
சொர்கத்தில் கூட பிரிவேனோ!

அகத்தில் கூட உன்னைப் புதைப்பேனே!
கவிதை என்னும் வடிவில் உன்னை காப்பேனே!
உன் பெயர் கூட நானாக இருப்பேனே!

உன்னை கண்ணால் காண்பதால்,
நான் அனுபவித்த ஸ்பரிசம் அன்றோ இவை!!!!!

என் வாழக்கையின் பிரியாத வரம் நீ!!!!!

எழுதியவர் : எண்ணத்திரவங்கள் (19-Jul-16, 3:28 pm)
Tanglish : piriyadha varam nee
பார்வை : 1284

மேலே