சுச்சாய் சுச்சாய்

சுச்சாய், சுச்சாய்!
##@
யார பாட்டிம்மா சுச்சாய்னு கூப்படறீங்க?
@%@
வாடி தங்கம். நா யாரடி தங்கம் கூப்படப்போறேன். எங் குறும்ப்க்காரப் பேரன் சுச்சாயைத்தாங் கூப்படறேன்.
@%@
பாட்டிம்மா தம்பி பேரு சுச்சாயி இல்ல பாட்டிம்மா. சித்தியும் சித்தப்பாவும் அவுனுக்கு வச்ச பேரு சுஜாய். சுஜாய்-னா வெற்றின்னு அர்த்தம் பாட்டிம்மா.
@%@
ஏண்டி தங்கம் எம் பேரனுக்கு வெற்றின்னு தமிழ்ப் பேர வச்சா குடியா முழுகிப் போயிடும்? உங்க சித்தப்பனும் சித்தியும் படிச்சு பல பட்டங்கள வாங்கி பெரிய வேலைல இருக்கறாங்க. என்ன பிரயோசனம்?
தாயைக் கேவலப்படுத்தறவங்களும் தாய்மொழியக் கேவலப்படுத்தறவங்களும் ஒரே இனண்டி. எல்லாம் சினிமா மோகத்திலே பித்துப்பிடிச்சு அலையறாங்கடி.
@%@
பாட்டிம்மா எல்லாம் ஊரோட ஒத்துப்போறவங்க. உங்க மூத்த மகன், எங்கப்பா மாதிரி எல்லாம் இருப்பாங்கனு நீங்க எதிர்பாக்காதீங்க. இது கலிகாலம்.
@#%#@@@@@@@@@@@#%@###@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க. உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கவில்லை. சினம் கொள்வோர் சீறிப்பாயுங்கள் மின்னஞ்சலில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sujay = Victory , வெற்றி
সূজায; ਸੂਜਾਯ; ಸೂಜಾಯ; સૂજાય; ஸூஜாய; సూజాయ; സൂജായ
இண்டிடியாசைல்ட்நேம்ஸ்காம்
Given Name SUJAY. USAGE: Indian. OTHER SCRIPTS: सुजय (Hindi) Derived from the Sanskrit prefix सु (su) "great" combined with जय (jaya) "victory".
ஃபர்ஸ்ட்நேம்ஸ்மீனிங்காம்

எழுதியவர் : மலர் (19-Jul-16, 11:23 pm)
பார்வை : 115

மேலே