நெருப்புடா நெருங்குடா பாப்போம்மாற்று வரிகள்

சிறு முயற்சி

விழியிலே
எரிப்பவன்
கபாலி.......

விழியிலே எரிப்பவன் யாரு
விதியையே அழிப்பவன் நீரு
உரைக்கையில் முறைக்கிற விழியும் இருக்குமா..??
தெறிக்குமா....பின்னே
மண்ணிலே எழுந்த மின்னொளி நீ
புயலெலாம் அஞ்சும் ஓர் சுழி நீ
பாரெலாம்
பரந்த கனளொளி நீ
நரகத்தை விரும்பிடும் கபாலி......😎

பகைவனை அணை பழித்தல் கொடுவினை
புகழ்ச்சியில் பனை உயரம் உன் மனை
தோல்வி உனக்கு தூரம் தூரம்
உன் வெற்றி என்றும் கரத்தினோரம்
உன் பார்வைத் தீண்டும் பகைவன் ஊனும்
பல துண்டாய் என்றும் துடி துடித்து வீழும்.

ரஜினி;
நான் வந்துட்டேனு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு……..
25 வருசத்துக்கு முன்னால எப்படி போனானோ கபாலி அப்படியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு ….!!!!
கபாலிடா..

வையத்தின் தலை வலிமையுன் துணை
குருதியில் வெறி மாற்றமில்லா நெறி
அறவோர்க்கு இரக்கம் முற்றும் முற்றும்
வினைப்பயன் உனை சுற்றும் சுற்றும்
உடல் செல்லே உன்பேர் சொல்லும் சொல்லும்
உயிர் பிரிவை என்றும் உன்னுடல் வெல்லும்....
கபாலி....கபாலி....கபாலி😎

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (21-Jul-16, 6:26 pm)
பார்வை : 176

மேலே