சமம்

பசும்புல்லில் இருந்து தான்
பிரியாணி உருவாகிறது
எப்படி புரியலையே
என்கிறீர்களா?
பசும்புல்லை ஆடு உண்கிறது (உண்று உயிர் வாழ்கிறது )
ஆட்டை நாம் பிரியாணி
ஆக்குகிறோம்
இதோடு மட்டும் நிற்கவில்லை
பிரியாணியை நாம்
உண்கிறோம்
நம்மை இந்த மண் உண்கிறது
( அது என்ன நம்மை ! .நான் எல்லாம் சாகா வரம் பெற்றவன் .
என்னை பற்றி சொல்ல நீ யார் ?
என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது .சரி என்னை இந்த மண் உண்கிறது )
எனை (நமை)
புதைத்த இடத்தில் புல் பூண்டு முளைக்கிறது
சிமெண்ட் போட்டு பூசாமல் இருந்தால்.
பூசி இருந்தாலும் சுற்றியுள்ள இடங்களில் துளிர் விடும்.
இதிலிருந்து என்ன
தெரிகிறது
ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும்
ஏதாவது ஒரு வகையில்
தொடர்பு இருக்கும்
ஆதலால்
எதையும்
அலட்சியம் செய்யாதீர்கள்
எதையும் வீண் செய்யாதீர்
சிறு கறிவேப்பிலை தான்
அது இல்லாமல் ரசம் இல்லை
அது இல்லாமல் ரசமும் மணக்காது
அதிகம் பேரால்
எடுத்து போடக் கூடிய
கறிவேப்பிலை தான்
ரசத்தையே நிர்ணயிக்கிறது
~ பிரபாவதி வீரமுத்து