நனியே பிணியே

அறியாமல் விடியும் பொழுதுகளாய், விரல் நுனி மழுங்கும் செய்திகளாய், பரவும் பேச்சுகளாய் பருவகாலம் பார்த்தவன்....
பாரா வேளையில், எண்ணா நினைவில் ஓர் விபத்து..
உறவு தெரிந்தும் அறியா முகம் உன்னில் எனக்கு...
எதற்கேனும், எவர்க்கேனும் கிட்டா அறிமுகம் கிட்டிய பாடு அந்நிகழ்வின் தழுவல்...
பேச்சுகளும் புதிதல்ல, பெண்களும் புதிதல்ல அவ்வேளையில்...
புரியாத திருப்பமாய், கவர்ந்தது நின் பெயரா, உறவா, என் ஆசையா, அன்றது புரியாமல் சில நாட்களின் உரையாடல்...
மரியாதை என்ற ஒற்றை வார்த்தையின் உள்ளர்த்தமும் உன்னாலே தெளிவு...
வார்த்தை பிழை கண்டேன் உனக்காய் மட்டும்...
நித்தமும் எதிர்ப்பார்ப்பாய் சில தகவல்கள் உன்னிடம்..
விட்டு விலக மனமில்லா நிலை என்னிடம்...
எதுவும் சில காலம் என்றும் நினைப்பேன், அதுவும் கூட நான் பார்த்த சிலவற்றால்..
பிரயோகிக்கும் அணு வார்த்தையும் பரிசோதித்தேன், நீ நட்பின் உறவென்று...
நினைவில்லை இன்றும் உன் எண், தானாய் என் கணக்கில் சேர்ந்ததால்..
ரசனைகள் மாற்றம் நல்ல நட்புக்காகாது என்பர், இங்கு நடந்ததோ புரிதலின் தொடக்கம்...
கலை சார்ந்த உன் பார்வை என் கண்ணூடே வெளிச்சமாய்...
உதறி பார்த்தால் இவன் ஓர் ரசனையற்றவனே, இருந்தும் எனை பாராட்டும் உன் மனம்...
நித்தமும் தோன்றும் உன் அலைச்செய்தியில், காணும் கண்களால் குரல் கேட்டேன்...
பிரிவேன் நிச்சயமே என்பது என்னால் நீ கேட்ட அதிகபட்ச வெளிப்பாடு, முடியாது என்பது என் நிலைப்பாடு..
நட்பின் கூடாரத்திலும், நெருக்கடி சூழலிலும் விடை கொடுப்பேன் உனக்கு, ஏனோ புரியா உணர்வில்..
அரை தூக்க மயக்க உரையாடல்களும் உனக்கும் தந்தேன், ஆனால் பதிதாய் அனைத்தும்...
மாற்றி அமைக்கப்பட்ட தொனி, உனக்கான உரையாடலில்...
இன்றும் இன்னமும் என்றும் உன்னுடனே தினம் சில நொடிகள் எதிர்பார்க்கிறேன்..
எல்லாம் சில காலம், நீ உதிர்க்கும் உன் மணநாள் வரை...

எழுதியவர் : சரவணன் (25-Jul-16, 6:13 pm)
Tanglish : en aval
பார்வை : 91

மேலே