முதுமையின் வலி _ சே-பா

புரையோடிய
எங்களின்
விழிகளுக்குதான்
புலப்படவில்லை
என்று நினைத்தேன்,

ஆனால் நன்கு தெரியும்
உங்கள் கண்களுக்குமா புலப்படவில்லை
எங்களின் துயரம்,

தோளில் போட்டு
வளர்த்ததால் தான் எங்களை தோள்பட்டையில்
மிதிக்கிறாயோ,

திருவிழாவில் சுட்டிக்காட்டிய
எனது கரங்களை பற்றி
இந்த பழமையை
பத்திரப்படுத்தி வைக்கிறாயோ ?முதியோரின் கூண்டுக்குள்,

அய்யோ மகனே,
எங்களின் முதுமை
உன்னை முடமாக்கி
விடவேண்டாம்,

உனது குழந்தைகளை
கொஞ்சி விளையாட
குடித்தனம் இல்லாமல்
போனோமோ?

நீ வளர்க்கும் குழந்தை
எங்களின் பாசமடா,

பத்திரப்படித்திவை
எங்களுக்கு கிடைக்காத பாசம்
உன் குழந்தைகளுக்கு
கிடைக்கட்டும்,

என் தூக்கத்தை தொலைத்து உன்னை
என் தோளில்
தூங்க வைத்தேன்,

நீ வசிக்கும் நடுவீட்டில்
நீ வளர்க்கும் நாயிக்கு
இடம் உண்டு,

உன்னை வளர்த்ததுக்கு உன்
வீட்டு வாசலோரம் ஓர் இடம் இல்லாமல் போனதே!

கல்வி பயிலும் உன்னை கான
கரை வேட்டியோடு நான் வர,
உன் தோழரிடம் என் வீட்டு தோப்புக்காரன் என்றாய்,

கால் வயிறு கஞ்சி குடுச்சு
காசு நானும் அனுப்பி வைத்தேன்,
இப்போ ஒத்த வேல சோறுஇல்லாமல் தெரு ஒரம் நிக்கிறோமே...

மகனே உன் குழந்தையிடம்
சொல்லிவை நாங்கள் இறந்துவிட்டோம் என்று,

நாங்கள் பட்ட துன்பத்தை
நீயும் பட்டுவிட கூடாது
மகனே,

நீடோடி வாழ்க என் அருமை மகனே..

எழுதியவர் : சேர்ந்தைபாபு.த (26-Jul-16, 7:46 am)
பார்வை : 124

மேலே