மனசாட்சி கொண்ட மனிதனா இல்லை கொன்ற மனிதனா நீ

நான்
யாருக்கும்
ஒத்து ஊதுபவள் அல்ல
முக்கியமாக ஜால்ரா
அடிப்பவளும் அல்ல
மிக முக்கியமாக
யாருக்கும்
அடிபணிந்து போகிறவளும் அல்ல
திமிர் பிடித்தவளும் அல்ல
அழகு ரதியும் அல்ல
ஆத்திரம் கொண்ட அரக்கியும் அல்ல
யார்
எது சொன்னாலும்
நம்பிவிடும்
முட்டாளும் அல்ல
தனியாக சிரிக்க
பைத்தியமும் அல்ல
நல்லது எது
கெட்டது எது
என்று பிரித்தறிய
தெரிந்த
பெண்
அன்பிற்காக
உயிரையே
தரும்
உங்கள் தோழி

~ பிரபாவதி வீரமுத்து


** உயிரை விட
மேலானது
எனக்கு
மானம்
அதை
யாவுடனும்
ஒப்படைத்தேன்
என் உயிருடன்
உயிரிடத்தில்
(அவரிடத்தில்)
நான் அவருக்கு மட்டுமே
சொந்தமானவள்

கணவன்
மனைவிக்குள்
உயிரை கொட்டி கொட்டி
அன்பு செலுத்தியபடியே விழுந்து கிடத்தல்
மிகுதியான அன்பு
இதற்கு பெயர் அடிமைத்தனம் அல்ல

ஒருவரை ஒருவர்
விட்டுக்கொடுக்காமல்
அதே சமயத்தில்
அதிக அக்கறையுடன்
ஊடல் செய்வது
அடக்குமுறையும் அல்ல
நேசம்

இது தான் கணவன் மனைவி
புரிதல் கொண்ட
அன்யோன்யமான வாழ்க்கை
நான்
என் கணவனுக்காகவே
பிறக்கப்பட்டவள்
அவருக்கே சமர்ப்பணமானவள் **

~ பிரபாவதி வீரமுத்து



*********



அடக்குமுறை
அடங்கிபோதல்
இரண்டும்
என் அகராதியில்
இல்லை
காற்றை போல் நான்
சுதந்திரமானவள்

என் சுதந்திரம்
யாரையும் காயப்படுத்தாது

நீரோட்டம் போல்
தன் போக்கில்
போகும்
நீ வம்பிழுத்து
தவறு செய்தால்
பொங்கி வந்து
ஆளை சாய்க்கும்

அவரவர் வாழ்க்கையை
அவர் அவர்
வாழ்ந்து பார்ப்பது தான் வாழ்க்கை
நடுவில்
குறை கூறிக் கொண்டிருப்பது
பொறாமை கொள்வது
கோபம் கொள்வது
எரிச்சல் கொள்வது
கேளியாய் பார்ப்பது
நக்கலாய் சிரிப்பது
எல்லாம்
பைத்தியத்தின் புலம்பல்
என்று
தாண்டி
செல்லுங்கள்

செதுக்க செதுக்க
தான்
சிற்பம்
உண்டாகும்
தோழி(ழா)
நினைவில் கொள்
துன்பத்தை கண்டு வருந்தாதே
புயலுக்கு பின் அமைதிபோல்
இன்பம் உன்னருகில் தான்
காத்திருக்கிறது
அடியெடுத்து வை

உலகின் வெளிச்சத்தை
பாருங்கள்
இருளை பார்க்காதீர்
அப்பொழுது தான்
கண்ணுக்கு
நல்லது கெட்டது
தெரியும்

அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
பிறரை குறை சொல்ல அல்ல
உன்னை நீ மேம்படுத்திக் கொள்ள
இங்கே அதிகம் படித்தவர்கள்
யாருமே இல்லை
உனக்கு தெரிந்ததை
தைரியமாய் சொல்
தெளிவு பிறக்கும்
ஆர்வம் வளரும்

இங்கே யாவரும்
வஞ்ச புகழ்ச்சி அணி
தான்
எளிதில் புரிந்து கொள்வதற்கு
அப்பாற் பட்டவர்கள்
உன் ஆறாம்
அறிவை கொண்டு
உலகை பார்
யாவும் விளங்கும்

தமிழுக்கு தலை வணங்கு
தமிழை வாய் முழுக்க
பேசு
தடங்கல் ஆயிரம் வந்தாலும்
போராடு

உதாரணமாக
தமிழில் பேசத் தெரியும்
எழுதத் தெரியாது
என்று நீ நினைத்தால்
ஒன்றும்
பிரச்சனை இல்லை
நீ அறிந்த வார்த்தைகளை எல்லாம்
எழுதி பார்
தவறு வந்தால் வரட்டும்
நடக்க ஆரம்பிக்கும்
குழந்தை
கீழே விழுவது சகஜம்
ஏளனங்களை
நீ காதில் வாங்காதே
அவர்கள்
வந்து உனக்கு சொல்லித்தர போவதில்லை
உனக்கு சோறு போடவில்லை

அவர்களுக்கு குறை கூறத் தான் தெரியும்
உனக்கு தெரிந்தது கூட
அவர்களுக்கு தெரிந்திருக்காது
வெளியில் மட்டும்
எல்லாம் எனக்குத் தெரியும்
என்பது போல் காட்டிக்கொள்வார்கள்
உன் முன்னேற்றத்தை பார்த்து பொறாமை பட்டு

வெளியில் அன்பாக பேசி நடித்து
உள்ளுக்குள்
உனை கீழே தள்ளிவிட
பள்ளம் தோண்டுவார்கள்
நீயும் அவர்கள்
சொல்வதை எல்லாம்
வேத வாக்காக எண்ணி விழ முற்படாதே
ஆராய்ந்து முடிவெடு

நல்லவர்கள்
யார்
கெட்டவர்கள்
யார்
பிரித்துப் பார்க்கும்
அறிவை
அந்த பராபரமே
அறிந்ததில்லை
நான் எப்படி என்றால்?
உண்மை தான்

நீ உன்னை பார்
உன்னில் சுய ஒழுக்கம் இருக்கிறதா
எதையும் அறிவால்
ஆய்ந்து பார்த்து
விளங்கிக் கொள்ள முடியுமல்லவா
அதை வைத்து
நல்லதோ
கெட்டதோ
அறியலாம்
உனக்கு மனசாட்சி
இருக்கிறதல்லவா
அதில் ஈரம் இருக்கிறதல்லவா
அதில் அன்பு உறைகிறதல்லவா
உயிர்களுக்காக
துடிக்கிறதல்லவா
உன் இதயம்
எந்நிலையிலும்
தன்நிலை மாறாத மனமல்லவா
உன் மனம்
அப்படியென்றால்
நீ யாவும்
கற்றுணர்ந்த
மனசாட்சி கொண்ட மனிதன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Jul-16, 3:33 am)
பார்வை : 372

மேலே