ஈடாகுமா அன்னை முன் அனைத்தும்
ஆயிரம் உறவு இருந்தாலும்
என் அன்னை ஈடாகுமா !
அரசனாய் நான் இருந்தாலும்
ஆண்டியாய் நான் நின்றாலும்
அகிலமே எனை வெறுத்தாலும்
அன்போடு இருகரம் நீட்டி
என்னை அரவணைக்கும் என்
அன்னை ஈடாகுமா !
கறுப்போ வெள்ளையோ நான்
கண்னுக்கு தெரியாத போதும்
எனை கருவுக்குள் வைத்து
காதலித்த என் அன்னை
ஈடாகுமா !
அரை வயிறுராய் அவள் இருந்து
ஆயிரம் சுமை தாங்கி
ஆயுள் முழுவதும் பசியின்
கொடுமையை எனக்கு அறியாது
எனை ஆளாக்கிய என்
அன்னை ஈடாகுமா !
கல்லையும் தலையில் சுமந்து
கல்வி கனவையும் கண்ணில்
சுமந்து என் கல்வி கண்
திறந்த என் அன்னை ஈடாகுமா !
கேட்டூம் கொடுக்காத தெய்வம்
உண்டு என் தேவையறிந்து நான்
கேட்காமலே கொடுக்கும் தெய்வம்
என் அன்னை ஈடாகுமா !
இந்த உறவுகளும்
இந்த உலகமும்
இந்த தெய்வங்களும்
என் அன்னை ஈடாகுமா !