வார்த்தை ஒன்று அமிழ்தம் அது

அழகான என் தமிழ்
மொழியில் இருந்து
அளவான மூன்று வார்த்தை
எடுத்து அதில் என்
மனதுக்கு பிடித்த ஒரு
வார்த்தையை கவிதையாய் அமைத்து
அடிக்கடி அதை படித்து
ஆனந்தம் அடைகிறேன் !
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை படித்தாலும்
அலுத்து போகாத கவிதை
எனக்கு அது !
உலகில் பிறந்த உயிரினங்கள்
அனைத்தும் முதலில் கூறும்
வார்த்தை அது !

தேன் என்று கூறினால்
இனிக்காது நா கூறிப்பார்
இந்த வார்த்தையை உடன் இனிக்கும் நா

நன் எடுத்த மூன்று எழுத்து
1) அ
2) ம்
3) மா
நான் எழுதிய ஒரு வார்த்தை கவிதை = அம்மா !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (27-Jul-16, 10:23 pm)
பார்வை : 123

மேலே