அம்மா

அம்மா...

யான் சிரிக்க அழுகாச்சி காட்டுவாள்

அழுதால் தானும் அழுவாள்

உதைத்தாலும் சிரிப்பாள்

உம்மா கொடுத்தாலும் சிரிப்பாள்

கண் சிமிட்டினால் துள்ளிக் குதித்திடுவாள்

கை அசைத்தால் முத்தம் கொடுப்பாள்

கால் ஆட்டினால் தாலாட்டுவாள்

கால நேரங்கள் இல்லை

யான் கூச்சலிட்டால் விழித்துக்கொள்வாள்

என்னை கிள்ளிப் நகைப்பர் சிலர்-ஆனால்

நான் நித்திரையில் மூழ்கிய பின்னும்.

அவளோ ஆரிரரோப் பாடுவாள்

நித்திரை கலையாமல் இருக்க

நெஞ்சில் மீது ஏற்றி ஊஞ்சல் ஆட்டுவாள்

குளிரில் அனைத்துக் கொள்வாள்

வெயிலில் சேலையை குடையாக்குவாள்

மழையில் தானே குடை ஆவாள்

நான் தவழ்ந்திட

அவளும் தவழ்ந்து நடை பழக்குவாள்

முகம் சுழிக்கும் போதெல்லாம்

முதுகில் ஏற்றி யானைச் சவாரி செல்வாள்

சின்ன சின்ன சண்டையிடுவாள்

மறுநொடியே சிரித்து விடுவாள்

கடை வீதியில் நான் கை காட்டினால்

தன் தேவைகளையும் மறப்பாள்

விழுந்தால் சொந்தங்கள் நூறு

கை கொடுக்கும்-ஆனால்

அரவணைக்க அவள் மட்டுமே வருவாள்

ஆயிரம் பேர் சேவை செய்ய இருக்க

அம்மாவோ கூலி கேட்க மாட்டாள்

வரம் ஒன்று பிச்சையிடு அம்மா

மறுபிறப்பிலும் உன் கருவில் உதித்திட

-அ.பெரியண்ணன்

எழுதியவர் : அ.பெரியண்ணன் (28-Jul-16, 4:44 am)
Tanglish : amma
பார்வை : 674

மேலே