கன்னி தமிழ்
கண்டேன் கன்னித் தமிழை
படித்து சுவைத்தேன் செந்தமிழை
தினம் இரசித்தேன்
பல கவிதை'கள்' வடித்'தேன்'
கம்பன் மகளைக் கண்டேன்
மெய் மறந்'தேன்'
அவள் பின் தொடர்ந்தேன்
இளம் செவ்விதழைக் கேட்டேன்
மெளனமாய் நின்றாள்...
சம்மதத்தின் அறிகுறியென
மகிழ்ச்சி அடைந்'தேன்'...!
ஐய்யய்யோ...
தானாக வருவதில்லை துன்பம்
விரும்பாமல் கிடைக்காது இன்பம்
கண்களை மூடினாலும்
போக மறுக்கிறது
அவளின் பின்பம்...
நெறுங்கிதான் உறவாடுகிறாள்
என் கனவில் தினம்!
அவளைச் சுற்றியே
வலம் வருவ'தேன்' மனம்?!
அவள் ஒரு தமிழ் இலக்கணம்
அதனால்தான் புரட்டி புரட்டிப் படிக்கிறேன்
எந்நாளும்... விடியும் வரை நீளும்...
எங்களுக்குள் இருக்கும் உறவு...
விடிந்த பின்னால் அது ஒரு கனவு!