கிரகங்களும் - பலன்களும்
யாவரின் மனதிலும்
எழும் கேள்வி
இந்த பெயர்ச்சியின்
பலன்களின் தன்மை பற்றி
விரக்தியின் விளிம்பில்
இருப்பவர்கள்
மகிழ்ச்சியை எங்கோ
தொலைத்தவர்கள்
துயரத்தின் நிழலில்
வாழ்பவர்கள்
இன்னும் பலவகையான
மனிதர்கள்
என பலரும்
எதிர்பார்த்து
காத்திருப்பது
ஆறுதலான
பலன்களைத்தான்
அவரவர் கடமையை
செய்துகொண்டு
அவனின் நாமத்தை
சொல்லிக்கொண்டு
அமைதி வாழ்க்கையை
வாழ்ந்திடுவோம்
நாளைய பொழுது
யாரறிவார்
உறங்கி எழுந்தால்
புது வாழ்க்கை
நமக்கு விதித்தது
எதுவென்று
முழுதும் நமக்கு
புரிந்து விட்டால்
வாழ்க்கையும்
சுவாரஸ்யம்
இழந்துவிடும்
அடுத்த நொடியின்
எதிர்பார்ப்பு
வாழ்க்கைக்கு
நிச்சயம்
அவசியம் தான்
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையென்றால்
அதை அனுசரித்து
போவது உத்தமம்தான்
கிரகங்களும் தத்தம்
வேலைகளை
தவறாமல் செய்து கொண்டு
இருப்பதினால்
பல சம்பவங்கள்
நம் வாழ்க்கையில்
தினந்தோறும் நடப்பது
உண்மைதான்
எத்தனை பேருக்கு
இது தெரியும்
இந்த பலன்களின்
முடிவு
நமக்கு சாதகமாய்
அமைந்து விட்டால்
மனதும் குதுகூலம்
அடைகிறது
பாதகமென்றாலோ
வெம்பி வேதனை
அடைகிறது
வருவது வரட்டும்
என நினைத்து
எதையும் எதிர்கொள்ள
தொடங்கி விட்டால்
வெற்றி நிச்சயம்
உனக்குண்டு
வாழ்க்கை கிடைப்பது
சில காலம்
அதற்குள் ஏன் இந்த
எதிர்பார்ப்பு
வாழ்க்கை போகின்ற
போக்கினிலே
நாமும் வாழ்ந்து
முடித்திடுவோம்
எல்லாப் பலன்களும்
நல்லதுதான்
என நம் மனமும்
முடிவு எடுத்து விட்டால்
பின் ஆனந்த வாழ்க்கைக்கு
தடையேது
ஆகையால்,
இந்த பெயர்ச்சி பலன்களை
அதன் போக்கில்
போக அனுமதி நாம்
தந்து விட்டு
நம் வாழ்க்கையில்
எஞ்சிய நாட்களிலே
சஞ்ஜலமின்றி
வாழ்ந்திடுவோம்