உருகுதல்

மாடியில நாயிருந்து
மணிக்கணக்கா எழுதுரங்க!
மார்போட காதல
மறைக்காம சொல்லுரங்க!

தனிமையில உங்களால
தத்துவலாம் சொல்லுரேனே!
அடிக்கடி அயிரமீனா
அங்கயிங்க துள்ளுரேனே!

தெருவோரோ வருவேனே
என்னத்தான் பாத்தீங்களா?
தினோபூவச்சு வருவேனே
ஞாபகங் இருக்குங்களா?

வெள்ளநிற சட்ட
உங்களுக்கு பொருத்தந்தான்!
கருப்புகூட அழகுனு
உங்களால தெரிஞ்சேநான்!

கண்மைபோல கருப்பாக
கண்கிட்ட ஒட்டுறீங்க!
கண்ணீரு வரும்போது
கரையாம இருக்குறீங்க!

வானவில்லு வரமாக
வளையலுக்கு கிடைக்கும்ங்களா?
வரமொன்னு இல்லேனா
வாக்கரசி தருவீங்களா?

உடம்புகுள்ள உங்களதான்
உசிர்போல நெனச்சிருக்கேன்!
உசிர்ரங்க நலம்ங்களா?
உடம்பு காத்ுவெச்சிருக்கேன்!

சொல்லவந்தத மறந்துபுட்டு
ஏதேதோ சொல்லுரங்க!
சொன்னதெல்ல தப்பூனா
என்னநீங்க மன்னிசிரிங்க!

மேல்படிப்பு முடிஞ்சிருச்சு
வெளியூரு போரேனே!
மனசமட்டு உங்களுக்கு
தந்துபுட்டு போரேனே!

இடிபோல இதயத்துல
ஏதேதோ இறங்குதுங்க!
இப்பவே பாக்கனும்னு
என்னுசுரு சொல்லுதுங்க!

இராத்திரிக்கு எட்டுமணி
இரயில்நிலையோ வருவீங்களா?
இரக்கமுள்ள காதல
அங்கவந்து சொல்லுவீங்களா?

எழுதியவர் : இஜாஸ் (31-Jul-16, 8:21 am)
பார்வை : 137

மேலே