தினம் ஒரு பாட்டு இயற்கை - 26 = 178

“கோடைக்காலம் பிறந்துவிட்டாலே
கொடைக்கானலில் திருவிழா…!
மாதம் முழுதும் மனதை வருடும்
பேரின்பப் பெருவிழா….!”

மலையில் விளையும் மூலீகை செடிகள்
காற்றின் வழியே நம்மை முத்தமிடும் !
தலையில் விழுகும் அருவியின் துளிகள்
உடலின் உள்ளே உஷ்ணம் குறைக்கும் !

கோக்கர்வாக்ஸ்’ டெலஸ்கோப்பில்
கோடையின் அழகை ரசித்து மகிழ்வோம் !
ஒன்ஸ்மோர் கேட்டு கோரஸாக
கோடையின் மகளை கூவி அழைப்போம் !

விண்ணை முட்டும் பில்லர் ராக்கில்
தன்னையிட்டு உயரம் அளப்போம் !
குட்டை மரத்தின் நுனியில் நின்று
கொட்டை கனிகளை கடித்து சுவைப்போம் !

சூட்சமம் நிறைந்த சூசைடு பாயின்ட்டில்
ஆட்சேபமின்றி மரணம் தவிர்ப்போம் !
சூசைடு செய்யும் கோழைத்தனத்தை
ராட்சச வெறியோடு வேரறுப்போம் !

விரிந்து பரந்த மதகு ஏரியில்
துணிந்து போட்டியில் கலந்து கொள்வோம் !
முனைந்த செயலில் வெற்றிபெற
முயன்று முயன்று மோதி பார்ப்போம் !

அறுபடைகொண்ட ஆறுமுகன்
குடிகொண்ட குறிஞ்சி ஆண்டவன்
கொடைக்கானல் மலையின் காவலன்
அவன் குறிஞ்சி மலரின் நாயகன் !

அறுந்து விழுகும் சில்வர் பால்ஸ் - அதன்
துளிகள் வெண்மையில் சூப்பர் ஸ்டார்…!
மருந்து கலந்த மூலீகை நீரை
சுமந்துவந்து கொட்டுதுப்பார்..!

கொடைக்கானல் மலைகளின் சிருங்காரம்
மலையடிவாரத்தில் துவங்கிடும் புகழாரம் !
பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒருமுறை
குறிஞ்சிமலர்களின் அலங்காரம் !

எழுதியவர் : சாய்மாறன் (31-Jul-16, 6:11 pm)
பார்வை : 133

மேலே