அழகு முகம்
திருவாள பெருமக்களே
எண்மாத என்மகளுக்கு
ஒருவாயி உணவூட்ட
உபயமேதும் சொல்லிடுங்க
மயக்கும் மதியரசனோ
பகல்வர மாட்றானே
முறுக்குமீச மொரட்டுஆசாமி
மூனுகாததூரம் மனைமாறிட்டான்
நரச்சமுடி நாட்டுகெழவன
கூற்றுவன் கூட்டிக்கிட்டான்
குரச்சபடி குதிக்கிறநாயி
குளிர்காயச்சல்ல சுருண்டுடிச்சு
மேலநாட்டு பூதமுகமும்
கேலிசித்திரமா ஆயிப்போச்சு
தோழனோட அழகுமுகத்த
அனுப்பிவச்சா கொஞ்சந்தேவல...