பண்ணை வீடு !

பண்ணை வீடு எங்கள் சென்னை வீடு
நல்ல தென்னைகள் கொண்ட பண்ணை வீடு !

பத்து மணங்கள் ஒன்றாய் பெற்று- அன்று
உவமை தந்த உண்மை வீடு !

குணங்கள் வேறு .மணங்கள் வேறு -அன்று
வேற்றுமை இல்லா பண்ணை வீடு !

சுறாவளிகளையும் சீராக்கிவிடும் -அன்று
தலைமை கொண்ட தங்க வீடு !

பண்ணை வீடு ! எங்கள் சென்னை வீடு !
இன்று கேள்விக்குறியாய் எங்கள்
பண்ணை வீடு !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (25-Jun-11, 12:55 pm)
பார்வை : 734

மேலே