பெண்மை வெல்லட்டும்

ஆணினமே ! ஆசையின் திரவத்தில்
ஆகாயத்தை மூழ்கடிக்கும் ஆணினமே !
கண்ணில் ஒழுகவிடும் இச்சை
கடலை வற்றவைக்கும் மோகம்
மின்னலின் அதிர்வில் காமம்
மூண்டெழுந்த சுனாமியாய் தாபம்
நாணமே! நாணமே ! ஆணாய்
சனித்ததற்கு நாணமே அவமானமே !

இதயம் உடைந்தது அறிந்தவுடன்
ஓராண்டில் ஆயிரமாயிரம் பெண்கள்
சிதையாகிப் போகிறார்கள் ஆண்களின்
சரீரப் படுக்கையில் கருகிய
விதையாகிப் போகிறார்கள் ஐயகோ !
வலியசாதி மக்களின் ஆடவர்க்கெல்லாம்
சதையாகிப் போனார்கள் உடலுயிர்
சிந்தை கெட்டு மதிமயங்கி போனார்கள்

பீடியின் சூட்டில் எரிந்தது
பெண்மை திரவம் மனமே !
பேடி இனமாம் ஆடவர்
போதைக்கு மாதுக்கள் மதுவாகின
பொடியின் நெடியில் எச்சில்
பீச்சினர் பெண்களின் கர்ப்பப்பையில்
வெடியில் பற்றிக்கொண்ட திரிபோல
வெடித்து கதறினர் பெண்களே

எரிமலையின் தாகம் தணிக்க
ஊர்ந்து வரும் நத்தையின்
நீர்க்குடத்தை உடைக்கலாமா ?
நிலவில் ஒளியிலா இங்கே
பாறாங்கல் தேய்வது ?இல்லை
பூக்களின் தேன்துளியிலா
சாராயத்தை கலப்பது ? ஐயோ
செத்து மடியுங்கள் ஆணினமே

விந்து பீச்சுவதில்லை ஆண்மை
வீரம் மிக்க ஆண்மையென்பது
உந்தி வாழ்வில் வெல்வதுதான்
அன்பும்பண்பும் தான் உண்மைஆண்மை
காந்தியின் சத்திய சோதனையில்
கடைபிடித்து ஒழுகினால் ஆணினம்
இந்தியாவில் மேன்மை பெரும்
இறகுவீசி பறவைகளும் பறக்கும்

மாற்றான் பெண்ணின் மேல்
மனதுவைத்து மானபங்கம் செய்யும்
அஃறிணை ஆடவர்க்கெலாம்
அவரின் உயிரணுவான பிறப்பு
உறுப்பை வெட்டிவீசி குப்பையில்
ஊடுருவி புதைக்க வேண்டுமாம்
அஃதொன்றே நல்ல நீதி
அப்போதுதான் பெண்மை வெல்லும்

எழுதியவர் : பாஸ்கரன் து (2-Aug-16, 6:21 pm)
சேர்த்தது : பாஸ்கரன் து
Tanglish : penmai vellattum
பார்வை : 814

மேலே