களைந்து போனது

கானல் நீரில்
குளித்து எழுந்த போது
வேர்வைத் துளிகள்
சொட்டின.

மணல்வெளி...
மரநிழல்....
அசைந்த காற்று..
அயர்ந்து தூங்கிவிட்டேன்.

நாவல் பழம்
நடுநெற்றியில் விழுந்து
கலைந்து போனது..
என் தூக்கமும்...

எழுதியவர் : கனவுதாசன் (7-Aug-16, 12:59 pm)
Tanglish : kalainthu ponathu
பார்வை : 147

மேலே