மண்ணுக்குள்
மண்ணுக்குள் புதைந்திருக்கும்
வைரமல்ல நான்
இருப்பவர்கள் இல்லத்தில் மட்டும் ஜொலிக்க
மண்ணுக்குள் உயிர் வாழும்
மண் புழுவல்ல நான்
பிறர் பாதங்களில் உயிர் விட
மண்ணுக்குள் விழும்
மழை துளியல்ல நான்
காணும் முன் காணாமல் போக
மண்ணுக்குள் தவமிருக்கும்
ஆல மர விதை நான்
வீறு கொண்டு எழுவேன்
ஓர் நாள் விருச்சமாக!!!