மனிதா

மனிதா
உன்னை சூழ்ந்துள்ள
நச்சு காற்று இது ...

புதைந்த காலத்தில்
சுயநலவாதிகள் பங்கிட்டு விதைத்த
நஞ்சுகளில் ஒன்று - சாதி. ..
கொன்றது
குடித்தது
இதுதான் தீண்டாமையின்
சரித்திரமோ ...

நஞ்சென்றால்
கொல்லவேண்டுமே ..
மனிதத்தை கொன்றது
மானத்தை கொன்றது
அன்பை கொன்றது -இன்னும் தீரவில்லை..

கடவுளின் குழந்தைகள் தான்
மனிதர்கள் என்றால்
நாம் தானே உடன்பிறப்புகள் ...
இதில் எங்கே சாதி?

கடவுள் தட்டிக்கேட்கவும் இல்லை
கண்மூடிக்கொள்ளவும் இல்லை
ஒருவேலை அவர்களின் பிரார்த்தனையோ?
இல்லை..இல்லை...
அறிவை வைத்து படைத்துள்ளானே..

இன்று குறைந்துவிட்டதாம் தீண்டாமை
அருகில் நின்று பார்க்கின்றோம்
மாயை போல்...

குருதி சீற்றம் கொண்டு
சீறி பாய்ந்தாலும் -நம்
சிந்தையில் தீப்பொறியென
எழுத்துக்கள் பிறந்தாலும்
நீதி தேவனின் வாசலில்
காத்துகிடக்கிறது
பகுத்தறிவின் வரவிற்காக...

உங்கள்
பகுத்தறிவைக்கொண்டு
நீதி சொல்லுங்கள் ..
கிடைத்திடுமா மனிதா?

எழுதியவர் : மருதுபாண்டியன். க (9-Aug-16, 10:05 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : manithaa
பார்வை : 228

மேலே