வலிகள்
பொட்டில்லாத
பெண்ணுக்குத்தான்
தெரியும்
பூவில்லாத
தன்
தலையின்
பாரம்
என்னவென்று
உடன்கட்டையில்லா
உலகத்தில்
வாழ்வது
உரிமையல்ல
நரகமென
உணர்வுள்ளவர்கள்தான்
உணர்வார்கள்
உயிரை
இழந்து
உடலாய்
உலகில்
வாழும்போது
அவர்கள்
காலில்
அணியாத
கொலுசும்
ஒலியெழுப்பி
அழுகிறது
வாழ்வை
இழக்காது
தன்னை
இழந்தவர்களுக்குத்தான்
தெரியும்
இது
வரமா
சாபமா
என