எனக்கும் முளைக்கும் சிறகுகள்

எனக்கும் முளைக்கும்
சிறகுகள்
எனக்கும் கிடைக்கும்
ஒரு வானம்
என் பறப்புக்கள்
வைரமாகும்
வானம் கடந்த வெளி
விரிவாகும்
விடியல்கள் என்னால்
விரும்பப்படும்
பசியின் வேதனைக்கு
விலக்கு வழங்கப்படும்
உலர்ந்த வயிறு
நிரப்பப்பட்டிருக்கும்
ஏக்கப்பார்வை
எருதேறிப்போயிருக்கும்
வறுமையின் விகாரங்கள்
வதைக்கப்பட்டிருக்கும்
வற்றிய வாழ்க்கை
அழகாய் மாறியிருக்கும்
இரத்தல்கள்
இற்றுப்போயிருக்கும்
அப்போது ஏழைக்கு உதவ
இருகைகள் இணைந்திருக்கும்
- வினோ சர்மிலா