நெஞ்சில் வைத்து தாங்குங்கள்

பாசத்தை பகிர்ந்து கொள்ளும்
இன்ப துன்பங்களை பங்கு போட்டுக்கொள்ளும்
வலியை சேர்ந்து அனுபவிக்கும்
துவளும் பொழுது தோள் கொடுக்கும்
நான் இருக்கிறேன்
என்று தோள் சாய்த்துக்கொள்ளும்
வெற்றிகளில் தட்டிக்கொடுக்கும்
தோல்வியில் மடி சாய்த்துக்கொள்ளும்

கண்ணீரை துடைத்துவிட்டு
கண்ணீர் சிந்தவிடாமல்
பார்த்துக்கொள்ளும்
உறவுகளையும்
நட்புகளையும்
நெஞ்சில் வைத்து தாங்குங்கள்

#யாரையும் உதாசீனம் செய்யாதீர்கள்
#எல்லோரையும் மதியுங்கள்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Aug-16, 6:29 am)
பார்வை : 112

மேலே