எது நாகரீகம் எது வளர்ச்சி

எது நாகரீகம்?
எது வளர்ச்சி?

நாகரீகம் வளர்ந்ததடா
நாடு
நாசமாய் போனதடா

கஞ்சிய குடிச்சிப்புட்டு
கௌவுந்தடிச்சி படுத்தோமடா
பர்கர தின்னுப்புட்டு
ஆஸ்பத்திரிக்கு அழையுரானடா

ஜட்டி தெரிய ஆடையை தான்
அவனும் போடுராண்ட
உடம்பு தெரிய
அவளும் ஆடை போடுராட
நாகரீக வளர்ச்சியட

தமிழுல நீயும் பேசுனா
பக்கதுலயும் அண்ட மாட்டாண்டா
ஆங்கிலத்தில் நீயும் பேசு
அறிவாளினு நினைக்குராண்டா

செவ்வாயில் தண்ணி இருக்கானு
பாக்குரான்டா
பக்கது மாநிலத்துல இவன்
தண்ணிக்காக
நிக்குறான்டா

தன்னோட வரலாற்ரையே மறந்துடாண்ட
பாவிபய
உலகத்தையே ஆண்டானட தமிழன்
அடிமையா நிக்குராண்டா

வருஷத்துக்கு ஒரு ராக்கெட் போகுதுனு
பெருமையடையாதட
வாரம் ஒரு விவசாயி சாகுராண்டா

எல்லாத்துலையும் வளர்ச்சி அவசியம்
தாணடா
அவசியமில்லாத வளர்ச்சி
இங்கே
தேவையில்லையடா.......

எழுதியவர் : திவாகர் (11-Aug-16, 1:44 pm)
பார்வை : 90

மேலே