பேரழகு

மனோரஞ்சிதம் மயங்குதடி
கன்னக்குழி அழகை கண்டு..!
கெண்டை மீன் துடிக்குதடி
விழியை கண்டு..!
பஞ்சவர்ணக்கிளி சொக்குதடி
மூக்கின் அழகை கண்டு..!
கோவைப்பழம் கனியுதடி
செவ்விதழை கண்டு..!
வலம்புரி சங்கும் வலையுதடி
கழுத்தைக்கண்டு..!
கல்லும் கரையுதடி
பாதம் கண்டு..!
நெற்கதிரும் தோற்றதடி -உன்
நாணம் கண்டு..!
மல்லிகையும் உதிர்ந்ததடி -உன்
வாசம் கண்டு..!

நான் மட்டும் பெண்ணாக
நிற்கிறேன் ...........!
உன் பேரழகை
கண்டும் .................!

எழுதியவர் : சித்ரா சதிஷ் (11-Aug-16, 5:24 pm)
பார்வை : 930

மேலே