காதலும் கண்களும்

கண்களில் உள்ள கருவிழியில்
கண்மணி உந்தன் அன்பினை
கண்டேன் எந்தன் காதலாய்

கண்டதெல்லாம் காதலென்று
கனவினில் தான் நினைத்ததுண்டு
கண் முன்னே கண்ட பின்பு
கடந்து செல்லத்தான்
கால்கள் மறுக்கிறதே

காலங்கள் முப்பொழுதும்
காணும் வரம் ஒன்றை
கண்மணி நீ தருவாயோ

பின் தொடர்ந்த காலமெல்லாம்
பின்வாங்காமல் வந்தேனே
பிறை முகத்தை காணத்தான்

முத்துக்கள் சிதறி விழும்
முத்தான அழகைத்தான்
முன் எப்போதும் கண்டதில்லை - உந்தன் புன்
முறுவலை கண்டதுமே
முதல் முறை போல் ரசித்தேனே

மேகங்கள் தூரிகையாய்
மாறியதை உணர்ந்தேனே
உந்தன் கார்கூந்தல் அழகினிலே

உந்தன் முக ஒளியினில் தான்
வெண்ணிலவும் மிளிர்கின்றதே
கதிரவனின் ஒளியை விடுத்து
உந்தன் அழகினால் அதை தடுத்து

கண்கள் ரெண்டும்
இழுத்தடி காந்தமாய்தான்
காணும் முன்பே
கண்ணெதிரே

காணோம் என
எந்தன் கண்கள்
உன்னை தேட
காதலொன்று உண்டென்றால்
கண்டறிவாய் நீயும் என்றாய்
உன் ஓர விழிப்பார்வையினால்

உந்தன் தோழிகளோடு
களிப்பினில் நீ வரும் போது
கடைக்கண் பார்வையினால்
எடைக்கல்லாய் எனையும் தான்
நம் காதல் தராசில் அளவிடுவாய்


ராஜ நடையை
என்றும் நான் கண்டதில்லை
என் கண்ணே
நளினமான உந்தன் நடையினில்
தான் கண்டேன்
ஓராயிரம் அரசர்களின்
ராஜ நடையை

துளிகளில் இருந்து
பெருவெள்ளமாய் மாறியது
என் அன்பே
உந்தன் புன்னகையை
கண்டே தான்

கண்ணாமூச்சி தான்
என தெரிந்தும்
கண்டுபிடிக்காதவாறே
ஆடி வந்தோம்
ஆட்டம் ஒன்றை
நேர் எதிரே
கண்டபின்பும்
நம் காதல் விளையாட்டில்

மின்னல் தோன்றி
மறைவது போல்
உந்தன் கோவமும் தான்
மின்னொளியொன்றை உமிழ்ந்துவிட்டு
புன்னகையோடு சென்றிடுதே

பின்னி வந்த உந்தன்
கூந்தலில் தான்
என் காதல் பின்னி வைத்தேன்
அவிழாதவாறே
என்றென்றும் அன்புடனே

தவறுகள் ஆயிரம்
நான் இழைத்தும்
தண்டனைகளை
மன்னிப்பாய்
என்றும் தான்
தந்துவிட்டே
வென்றாயே
எனையும் நீ

ஒரு நொடியினில்
ஆயிரம் யுகங்கள் தான்
கண்டோம் நாம்
நம் மன வானில் தான்

காண கிடைக்காத பொக்கிசம்
தான்
நம் காதல் என்றென்றும்
தொலைக்கவும் கூடாத
பொக்கிசமும் அதுதானே

எழுதியவர் : சதீஷ் குமார் தங்கசாமி (11-Aug-16, 4:39 pm)
Tanglish : kaathalum kangalum
பார்வை : 602

மேலே