ரோசாப்பூ
எத்தனை எத்தனை நிறங்கள்
இந்த அழகிய ரோசா பூவிற்கு
சிவப்பு,மஞ்சள், வெள்ளை ,கருப்பு
இன்னும் எத்தனையோ நிறங்கள்
இத்தனை நிறங்களா என்று
சிந்தனையில் இருக்க நம்மை
மயங்க வைக்கும் ரோசாவின்
மெல்லிய ஆனால் ஊடுருவும்
ஓர் இனிய வாசனை
இளம் காதலரை இணைக்கும் வாசம்
அன்றலர்ந்த ரோசாவை தொட்டு பார்க்கின்
' பூவின் ' மென்மை புரிந்துவிடும்
இத்தனை அழகிய ரோசாவிற்கு
அரணாய் இயற்கை தந்தது
அதை சுற்றி நிற்கும் முட்கள்
ரோசாவிற்கு முட்கள் தந்து
காத்திடும் இறைவன்
அழகிய கன்னியரை
காமுகர் கண்ணிலிருந்து காக்க
ஒன்றும் தராதது ஏனோ
இனிவரும் யுகத்தில் பெண்ணை படைத்தால்
இறைவா அவளுக்கு பிறப்பில்லேயே
தக்க காப்பையும் தந்து காத்தருள்வாயே
கன்னியும் நீ படைத்த மனித ரோசாப்பூவே !