பெண்ணையே , பனையே

பனை மரத்தில் பெண் ,ஆண்

இரண்டும் உண்டு

பெண் மரம் பெண்ணை

இவள் முற்றும் ஒரு பெண்ணே

செழித்து எழிலாய் வளர்ந்து

கொத்து கொத்தாய் பூப் பாள்

பூக்கள் குலை குலையாய்

காயாகி கனியாகும்

கோடையில் வழி போக்கற்கு

பசி, தாகம் போக்கும் உணவாம் இக்கனிகள்

பசுமை நிற பெண்ணை ஓலைகளில்

அழகிய சிறிய அன்றில் (தூக்கணாங் குருவி)

தொங்கும் அதிசய கூடுகளை

பரவலாய்க் கட்டி கும்பலாய் வாழ்ந்திடும்

பெண்ணை பனை அன்னை

அவள் நிழலில் அரவணைப்பில் !


ஆண், பெண் பனை இரண்டும்

இயற்கை தந்த' டாஸ்மாக்!'

ஆனால் இந்த' டாஸ்மாக்' இல்

இளங்காலையில் உரம் தரும்

இனிய பதநீர் கிடைக்கும்

அனைவரும் அருந்தலாம்

ஆரோக்கியம் பெறலாம்

மதியம் போய் இதை அருந்த

இதுவே'கள்'ஆய் மாறிவிடும்


உழைத்து உழைத்து அலுப்பில் வரும்

உழைப்பாளிக்கு இதம் தரும் கள்;

அளவோடு உண்ண அரு மருந்தே இது !


இயற்கை நமக்கு அளித்த

எத்தனையோ எத்தனையோ

மரங்கள் செடிகள் கொடிகள் உண்டு

என்னை வெகுவாய்க் கவர்ந்தது

இந்த மணற்பாங்கில் ஓங்கி வளர்ந்திருக்கும்

பனை மரங்கள்




நாவுக்கரசரும் போற்றி பாடினார்

பெண்ணை எனும் இப் பனையை

நம் தமிழ் நாட்டிலே பல முக்கண்ணன்

கோவில்களில் பெண்ணை தல விருட்சமுமாகும்

விந்தை தரும் பெண்ணை

இயற்கை தந்த மரமாய் உதித்த நங்கை

இல்லை,அன்றிலுக்கு அடைக்கலம் தரும் தாய் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-16, 1:27 pm)
பார்வை : 83

மேலே