கரைசேர்ந்த முத்து

பாக்களே பூக்களாய்
சொற்களே பட்டையாய்
பாமாலை தந்தவன் -இன்று
காமாலையால் கரைந்து
பூமாலைக்குள் முகமூடி
வாமலை தேடி செல்கிறான்


நம் கவிஞனின் ஆன்மா
இறையருள் பெறட்டும்
அவரின் பாடல்கள்
இறைநிலை அடையட்டும்

கடல்முத்து தீர்ந்தால் என்ன?
வைரமுத்து போன்ற அவரின் பாடல்களும்
வைரமுத்துவும் இன்னும் இருக்கிறார்கள்

எழுதியவர் : பாஸ்கரன் து (14-Aug-16, 10:28 pm)
சேர்த்தது : பாஸ்கரன் து
பார்வை : 66

மேலே