கோபம்
தேவி கோவமா உக்காந்திருந்தாள் சுந்தர் வீட்டினுள் நுழையும் பொது ..
என்னங்க உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைங்கன்னு .....
சாரி... ட இனிமே கரெக்ட் அ
வைக்குரேன் என்று சாந்தமாக பதிலளித்தான் சுந்தர்....
எதற்கு எடுத்தாலும் தேவி கு கோபம் கொள்ளும் சுபாவம்.....
உங்க கூட நான் சந்தோசமாக இல்லை என்று சிணுங்கி கொண்டு இருப்பாள்....
அன்று விடுமுறை சுந்தர் வீட்டில் இருந்தான் .... அவனை காண அவன் நண்பன் பாலு வந்திருந்தான்.....
அவனை ஒப்புதலுக்கு அழைத்து விட்டு தேவி சமையலறைக்கு சென்று விட்டால்...... அவள் குணம் பாலு அறிந்ததே......
இருவரும் சிறிது நேரம் ஹால் லில் பேசி கொண்டுயிருந்தனர்... அப்பொழுது கரண்ட் கட்டானதால் வெளியில் நின்று பேசி கொண்டிருந்தனர்.....
சமையலறை இல் இருந்து கோபமாக தேவி கத்தினாள்......
எவ்வளவு நேரம் வெட்டி பேச்சு பேசுவீங்க???
காஸ் தீர்ந்துடுச்சு வந்து மாட்டி குடுங்க என்றாள்....
அப்பொழுது பாலுவின் முகம் மாறியது...
சுந்தர் ஒன்னு கேட்ட தப்பா நினைக்க மாட்டியே....???
சொல்லுடா என்றான் சுந்தர் .....
எப்பிடி ட தேவி கூட இருக்க எப்போ பாத்தாலும் சிடு சிடு னு இருக்காங்களே உனக்கு கஷ்டமா இருக்காதா என்றான்......
சுந்தர் ஒரு புன்சிரிப்புடன் அவளை நான் என் குழந்தய தான் ட பாக்குரேன்....
குழந்தைக எது செய்தாலும் நமக்கு கோபம் வராது ட என்றான்......
அந்த வார்த்தையை கேட்டு கதவோரம் நின்று கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து நீர் துளிகள்...... !