ஒரு பக்கக் காதல் கதை பாகம் -01
அவன் பார்வைகள் எங்கு செல்கின்றது என்றே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்
அவன் : சமைக்க தெரியுமா ?
அவள் : தெரியாது ஏன் ?
அவன் : தெரியாதுனா நா கத்துப்பேன், பாட தெரியுமா ?
அவள் : கதுக்கல
அவன் : நல்லது நானும் கதுக்கல ..ஆனா பாடுவேன் ..தப்பா பாடி மாட்டிக்க கூடாதுல ..ஆட தெரியுமா
அவள் : தெரியாது, உங்களுக்கும் தெரியாது ஆனா ஆடுவீங்க அதான ...
அவன் : உனக்கு தெரிஞ்சா உன்கிட்ட கத்துக்கலாம் னு பாத்தேன் ப்ரேமம் மலர் மாதிரி, பூ கட்ட தெரியுமா ?
அவள் : பூ வெச்சிக்க கூட தெரியாது
அவன் : நல்ல வேலை தெரியும் னு சொல்லிருந்தா, எனக்கு தெரிஞ்ச ஒன்னும் வேஸ்ட்டா போயிருக்கும்
அவள் : நா கேக்கலாமா ?
அவன் : கண்டிப்பா
அவள் : இதெல்லாம் கேள்வியா ?
அவன் : கேக்கணும்னும் னு தோணுச்சு கேள்வியா தான் இருக்கணும்
அவள் : காதல் அனுபவம் இருக்கா ?
அவன் : நிறைய ...
அவள் : எதுவரைக்கும் ..?
அவன் : காதல் வரைக்கும் தான்
அவள் : அதுக்குமேல ?
அவன் : மேல போகமுடியல ...
அவள் : இனி ?
அவன் : இனி முடிவு உன் கைல
அவள் : அப்போ அம்மா கிட்ட பேசுங்க, என்னிக்கு நிச்சயதார்த்தம்னு
என கூறி அவனை பார்த்து புன்னகைத்தாள் ஒரு சிப் காபி அருந்திவிட்டு.. #love #marriage