பாவை வர்ணனை

கருப்பு அருவி
உன் கூந்தல்
நீ அருகிலிருக்க
இருட்டில் எதற்கு ராந்தல்?
(முகத்தில் இயற்கையாய் வெளிச்சம் )

கருப்பு வானவில்
உன் புருவம்
ரம்பை ஊர்வசிக்கும்
இல்லை உன் உருவம்

ஏசியன் நிறுவனத்தால்கூட உருவாக்க
முடியவில்லை உன் மேனி வண்ணம்
அன்னத்தின் சிறகைவிட
மென்மையானதடி உன் கன்னம்

தாஜ்மஹாலாய் உன் பல்லு
உன்னை பார்த்தாலே போதும்
தேவையில்லை கள்ளு

உனைப் படைக்க அவதரிச்சாங்க
உங்க மம்மி
ஆகவேண்டும் அவங்க
எனக்கு மாமி

பார்வையில காட்டாத முள்ளு
என்னை விரும்புறேன்னு
ஒருதடவ சொல்லு
இல்லையின்னா என்னுசிரக் கொல்லு...

எழுதியவர் : குமார் (19-Aug-16, 1:12 pm)
பார்வை : 462

மேலே