வனத்தில் உதிர்ந்த ஒற்றை மரம் 555
என்னுயிரே...
உன்னை நான் காணவேண்டும்
சீக்கிரம் வந்துவிடுவாயா...
வெப்பம் அதிகமாக
இருக்கிறது என்றாயடி...
முட்கள் நிறைந்த பாதையில்
ஓடிவந்தேன்...
வெப்பத்தில் வெளியேறிய
என் உடல் வியர்வையில்...
நனைந்தது என் ஆடை ...ஆ
டையை உலர்த்திவிட முள்வேலிக்கு
சென்று இருந்தேன்...
தொலைவில் இருந்து
என்னை கண்டாயோ...
நீ காத்திருக்க சொன்ன
இடத்தில் நான் இல்லை...
ஊடலை உடுத்திக்கொண்டு
சென்றாயடி நீ...
வனத்தில் காய்ந்து நிற்கும்
ஒற்றை மரத்தைப்போல...
நான் வாடி நிற்கிறேனடி
உன் நினைவில்...
உன் விரல்களால் நீ
தீண்டமாட்டாயா...
நான் மீண்டும்
பூத்துகுலுங்க...
உன் தீண்டலுக்கு
காத்திருக்கிறேனடி நான்.....