எனதும் உனதும்
அன்பு எனது
ஆசை உனது
பாசம் எனது
வேசம் உனது
காதல் எனது
கவிதை உனது
கண்கள் எனது
காணும் காட்சி உனது
உடல் எனது
உயிர் உனது
மெய் எனது
பொய் உனது
மொழி எனது
மெளனம் உனது
இன்பம் எனது
துன்பம் உனது
முகம் எனது
அதில் தாடி உனது...!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இடையில் வேறுபாடு நிறைய உள்ளது...!
ஆனாலும் அந்த முரண்பாட்டில்தான்
வாழ்க்கை பயணிக்கிறது.........................!