சு தந்திரம் பெற்றது உண்மைதான்

அன்னியனிடத்தில் பெற்ற சுதந்திரத்தை
இன்றைய அரசியல்வாதிகளும்,
மதவாதிகளும் மட்டும்தான் எடுத்துக் கொண்டனர்...
அதை மக்கள் எல்லோருக்கும் கொடுக்க மறுத்துவிட்டனர்...
பணம் பதவிக்காக தந்திரமாய் சட்டத்தையும் புதைத்துவிட்டனர்..
ஏழை வாக்காளனுக்கு எதற்கு (சு)தந்திரம்?
அவனை அடிமைபடுத்தியதால்தானே
இன்று நாம் பெற்றிருக்கின்றோம் முழு சுதந்திரம்...!
என்று நினைக்கும் மூடனே...!
பணக்கார முதலைகளுக்கு நீயும் இன்று அடிமைதானே..!
ஆனாலும் தந்திரமாய் செம்பறி ஆட்டுக் கூட்டத்தை ஆளும்
குள்ளநரி ஆட்சியாளன் தானே...இன்றைய (சு)தந்திரவாதி..!
மக்கள் நாமெல்லாம் குரங்கு இனத்தில் கோமாளி...!
தலைவன் எதைச் சொன்னாலும் தலையாட்டும் ஏமாளி...கி
சுயநலம் மிக்கவன்தானே அரசியல் செய்யும் முதலாளி...!
அவனை எதிர்க்க நினைத்தவரெல்லாம் தீவிரவாதி....!

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Aug-16, 10:46 pm)
பார்வை : 100

மேலே