போதும் என்னை விட்டுவிடு
உன் பார்வையில்
பதருகிறேன்..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் சுவாசத்தில்
சிதைகிறது இதயம்..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் முத்தத்தில்
முகம் சிவக்குதே..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் தொண்டை குழியில்
என் நெஞ்சத்தை
விழுங்குகிறாய்..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் கையசைவில்
நான் களவு
போகிறேன்..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் இடையில்
இடிந்து போனது
என் நாணம்..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் நடையில்
நலிந்து போகிறேன்..
போதும் என்னை
விட்டுவிடு..
உன் நினைவை சுமந்து
கர்ப்பம் தரிக்குதடி
காதல் கருவறை..!!
போதும்
என்னை
விட்டுவிடு..
குட்டி..!!