கவிதை 113 மன்னிக்கும் மனம் உள்ளவரைதான்

ஆலையத்திற்குள் இருக்கும் வரைதான்
சிலையும் தெய்வமாய் வணங்கப்படும்
உள்ளத்திற்க்குள் அன்பிருக்கும் வரைதான்
மனிதனும் பெருமையுடன் போற்றப்படுவான்
பாசத்தோடு பழகும் வரைதான்
உறவும் தொடர்ந்து வளர்ந்திருக்கும்
மன்னிக்கும் மனம் உள்ளவரைதான்
அமைதி என்றும் துணைநிற்கும்
நம்பிக்கையோடு அணுகும் வரைதான்
சோதனைகளும் சாதனைகளாய் மாறும்
முயற்சி எடுக்கும் வரைதான்
வெற்றி தொடர்ந்து வரும்
துடித்துக் கதறும் வரைதான்
தோல்விகளும் பாரமாய் வதைக்கும்
சந்தோசமாய் வாழும் வரைதான்
ஆரோக்கியம் நிரந்தரமாய் குடியிருக்கும்