நான்

காலம் கடந்து ஓடும்
காட்டாற்று வெள்ளம் நான்
கரை புரண்டு ஓடும் என்னை
கட்டுமரம் தான் என்செய்யும்?
தயங்கியே தலை நீட்டும்
தென்னை தான் என்செய்யும்?
கதிரவன் எனை காய்ச்சினாலும்
காற்றில் ஒன்றர கலந்திடுவேன்
பெருமழையாய் பெய்து
மீண்டும் பெருக்கெடுப்பேன்,
கடலிலே நான் கலந்திட்டாலும்
அலைகடலாய் மாறி நிற்ப்பேன்
அங்கேயும் ஓயாமல் ஓடிக்கொண்டிருப்பேன்.

எழுதியவர் : கேசவன் (20-Aug-16, 1:29 pm)
Tanglish : naan
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

மேலே