வாழ்க்கையில் அருளும்,ஈகையும்

எல்லாம் இருந்தும் யாது பயன்

அருளும், ஈகையும் இல்லை எனின்

அருள் இலார் கையில்

அமுத குடமே இருந்தும்

அதை அண்டி யாசிப்பார் இறார்

பண்பும்,அன்பும், ஈகையுமே

மனிதனை கடவுளாக்கிடும்

உள்ளார் நல்லார் இல்லாரை

அறிந்து அவர் வாழ வழிவகுப்பின்

இன்றேல் இருந்தும் இல்லாதாரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-16, 11:25 am)
பார்வை : 99

மேலே