கொலுசு
நூறுபேர் மத்தியிலும்
என்னை ரகசியமாய்
அழைக்கிறதொன் கொலுசு
கொலுசு என்ன இசை
கருவியா?
இத்தனை ஸ்வரங்களில்
இசைத்து காட்டுகிறாய்
கோபம் கொள்ளும்போது
ஒரு இசை
மோகம் கொள்ளும்போது
ஒரு இசை
அச்சம் கொள்ளும்போது
ஒரு இசை
நாணம் கொள்ளும்போது
ஒரு இசை
என எத்தனை ஸ்வரங்கள்?
இரவின் தாலாட்டும்
உன் கொலுசே
விடியலின் கூவலும்
உன் கொலுசே
ஊடல்கொள்ளும் வேலையிலும்
கொலுசால் பேசிசெல்கிறாய் என்னிடம்
எனக்கு மட்டுமே புரியும் உன்
கொலுசின் வார்தைகளால்.