சௌந்தர பாண்டியன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌந்தர பாண்டியன் |
இடம் | : உளுந்தூர்பேட்டை |
பிறந்த தேதி | : 12-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 150 |
புள்ளி | : 19 |
உன்னை பிரிந்தபின்தான் ஒவ்ஒரு
நொடியும் உணர்கிறேன்
இதயம் துடிப்பதை.
பெண்களை
அலங்கரிக்கத்தான் மலர்கள்
என்று நினைத்திறுந்தோன்
ஆனால்
மலர்களை அலங்கரித்து
வந்தாய் நீ
உன் கூந்தலில் சூடி.
தீயும் தந்ததில்லை
கூர்வாளும் தந்ததில்லை
உன் மௌனம்
தந்த வலியை
மரணமும் எளிது
உன் மௌனம் அதனினும்
கொடிது.
காதல் ஒரு விபத்து
மோதிக்கொண்டது
விழிகள் காயப்பட்டது
இதயம்.
நூறுபேர் மத்தியிலும்
என்னை ரகசியமாய்
அழைக்கிறதொன் கொலுசு
கொலுசு என்ன இசை
கருவியா?
இத்தனை ஸ்வரங்களில்
இசைத்து காட்டுகிறாய்
கோபம் கொள்ளும்போது
ஒரு இசை
மோகம் கொள்ளும்போது
ஒரு இசை
அச்சம் கொள்ளும்போது
ஒரு இசை
நாணம் கொள்ளும்போது
ஒரு இசை
என எத்தனை ஸ்வரங்கள்?
இரவின் தாலாட்டும்
உன் கொலுசே
விடியலின் கூவலும்
உன் கொலுசே
ஊடல்கொள்ளும் வேலையிலும்
கொலுசால் பேசிசெல்கிறாய் என்னிடம்
எனக்கு மட்டுமே புரியும் உன்
கொலுசின் வார்தைகளால்.
கல்லறை மீதும் சிரித்துக்கொண்டிருக்கிறது
மலர்கள்.
சிறகுகள் கனக்க தொடங்கிவிட்டன
கூண்டு பறவைகளுக்கு.
மரத்தின் சடலத்தின் (காகிதத்தின்)
மீது எழுதிக்கொண்டிருக்கிறேன்
இயற்கை பற்றிய
கவிதை.
மனிதனை மட்டும்
இருட்டில் படைத்திருப்பானோ
இறைவன்?
இவ்வளவு குறைகளுடன்
படைத்துவிட்டான்.
ஆலயங்களில் மட்டும் இருப்பதேஇல்லை
இறைவன்.
பௌர்நமி இரவில்
கடற்கரை மணலில்
நிலவை
ரசித்துக் கொண்டிருக்கிறாய்
நீ
உன்னை ரசித்துக்
கொண்டிருக்கிறது
நிலவு.