நொடியில் கவிதை
நொடியில்..!!
*
மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது.
பூமியின் உருண்டை வடிவில்
காலம் வெளி கணக்கிட்டு
கடிகாரம் கண்டான் மனிதன்.
ந.க.துறைவன்.