நிலவே நில் - படக் கவிதை

நிலவே நில்லாயோ
நீதான் நினைவின் நிழலன்றோ..!
நித்தம் நீ நிர்க்கதியாய்
நீக்கமற நிற்கின்றாய்
நீல நிசப்தங்களின்
நீண்ட நித்திரையில்
நிரலாய் நீள்கிறாய்
நிறைந்த நிரந்தரமாய்
நிரம்புகிறாய் நிலத்தில்..!
படத்துக்கு (நீல வான நிலவு) ஏற்ப கவிதை போட்டி விதிமுறைகள் - 20 சொற்கள் மட்டுமே. அந்த இருபது சொல்லும் "நி" அல்லது "நீ" என்ற எழுத்தில் தொடங்க வேண்டும்