அம்மாவுக்கு
தவழும் வயதிலே தவித்த பாசம்,
அம்மா என அழைக்கும் முன்பே
அயலூர் வாசம்.
நடை பழக எழுந்தேன் - விழுந்தேன்!!!
வலிக்குதான்னு கேட்க அருகில்
நீ இல்லையென்பதை உணர்ந்தபோது வலித்தது.
பார்க்கும் இடம் எல்லாம் உன் முகம் வந்து போச்சி,...
பாவம் என்ன செஞ்சேன்னு எனக்கு மறந்து போச்சி.
பத்து மாசம் பட்டினி கிடந்து பெத்தேனு,
பட்டயம் போட்டு பத்திரம் குடுத்துட்ட...
பசிக்கிதானு கேட்டு ஊட்டி விட – என்ன
பக்கத்துல வச்சிக்க மறுத்துட்ட.
அஞ்சி வயசுல ,
அந்து சந்தெல்லாம் உன் ஞாபகம்,
அந்த அரை கண்ணாடி பாத்ததெல்லாம்
அழுது வடிஞ்ச என்முகம்.
வளத்தவள சங்கட படுத்த மனசு இல்லாம,
வாய்மூடி அழக்கத்துகிட்டேன் சத்தமில்லாம...
தாய் பாசம்,
தாய் ஸ்பரிசம்,
நாய்க்கும் கிடைச்சுது,
என்ன தவிர!!!